முதலமைச்சர் ஜெயலலிதா 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவித்துள்ள திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

Aug 31 2015 11:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அறிவித்துள்ள திருச்சி உய்யக்கொண்டான் கால்வாய் சீரமைப்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பெட்டவாய்த்தலை கிராமத்தில் உள்ள தலை மதகில் மண்போக்கி மற்றும் திருச்சி மாநகராட்சிப் பகுதியில் உய்யக்கொண்டான் கால்வாய் ஆகியவற்றை புனரமைக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடரில் 110-வது விதியின்கீழ் 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். பெட்டவாய்த்தலை கிராமத்திலிருந்து திருச்சி மாநகர் வழியாக தஞ்சை வரை 71 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணிக்கும் இந்த கால்வாய் மூலம் 32 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், கிளை கால்வாய்கள் மற்றும் ஏரிகள் பயனடைகின்றன. திருச்சி பாலக்கரை பகுதியில் கழிவு நீர் கலப்பதாலும், மணல் தேங்கியுள்ளதாலும் அவற்றை அகற்றி தடுப்புச்சுவர் ஏற்படுத்தி குப்பைகள் சேராமல் கம்பி வேலி அமைக்கவும், கான்கீரிட் தளங்கள் அமைக்கவும், கடந்த ஜுன் மாதம் 13-ம் தேதி பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றன. பொக்லைன் இயந்திரங்களை கொண்டு வாய்க்கால் ஆழப்படுத்துவதையும், கரைகளை பலப்படுத்தும் பணிகளையும், சுற்றுச்சுவர் அமைக்கப்படுவதையும் அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். மனோகரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. கே.எஸ். பழனிசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பணிகளை துரிதமாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். உய்யக்கொண்டான் வாய்க்காலை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். இத்திட்டத்தின் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் திருச்சி நகரம் மேலும் பொலிவு பெறவும் வழி ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00