திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு 7 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை - முதலமைச்சரின் 2-ம் வெண்மை புரட்சி திட்டத்தின் கீழ் தரமான பால் உற்பத்தி செய்ததற்கு பாராட்டு

Aug 31 2015 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நடைமுறைப்படுத்தி வரும், 2-ம் வெண்மை புரட்சி திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு சுமார் 7 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவுப்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் பால்வளத்துறை மூலம் பொதுமக்களுக்கு தரமான பால் கிடைக்கச்செய்ய 2-ம் வெண்மை புரட்சி திட்டத்தின்கீழ் பால் உற்பத்தியாளர்களுக்கு பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பால் உற்பத்தியை அதிகரிக்க ஏழை-எளிய மக்களுக்கு விலையில்லா கறவை பசுக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்ட பால்வளத்துறை சார்பில் தரமான பால் வழங்கிய சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து பாராட்டு சான்றிதழும், ஊக்கத்தொகை வழங்கும் விழாவும், ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.திவான்பாட்ஷா தலைமையில் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதியில் உள்ள கோவில்பட்டி ஊராட்சி முதலிடம் பெற்று, 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும், நான்கு நட்சத்திர அந்தஸ்தும் பெற்றது. மேலும் அதிக அளவு தரமான பால் உற்பத்தி செய்தவர்களுக்கு மொத்தம் 6 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையை அமைச்சர் திரு.நத்தம் இரா.விஸ்வநாதன் வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.உதயகுமார், மாநகராட்சி மேயர் திரு.மருதராஜ், மத்திய கூட்டுறவு சங்கத் தலைவர் திரு.நடராஜன் மற்றும் வருவாய்த்துறையினர், கழக நிர்வாகிகள், பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00