தொடர் விடுமுறையால் களைகட்டும் சுற்றுலாத் தலங்கள் - உதகையில் குவியும் ஆயிரக்கணக்கான மக்கள்

Aug 29 2015 9:46AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஓணம் பண்டிகையையொட்டி, சுற்றுலாத் தலமான உதகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தவண்ணம் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மற்றும் படகு இல்லம் உள்ளிட்டவற்றை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வதுடன் கண்டுகளித்து வருகின்றனர். இந்நிலையில் ஓணம் பண்டிகையையொட்டியும், தொடர் விடுமுறையாலும் உதகையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். தாவரவியல் பூங்காவில் உள்ள கிக்யூ மற்றும் அங்குள்ள புல்வெளியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்கின்றனர். அதுமட்டுமின்றி, இத்தாலியன் பூங்காவையும், கண்ணாடி மாளிகையையும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். 2-வது சீசனுக்கான பணிகள் நடைபெற்று வருவதால், பூங்காவில் குறைந்த அளவு மலர்களே காணப்படுகின்றன. இருப்பினும் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட உதகையில் உள்ள அனைத்து இடங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00