அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் மற்றும் கழக நட்சத்திரப் பேச்சாளர் நடிகை ஆர்த்தியின் தாயார் மறைவு குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்

Aug 29 2015 7:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு, நாகப்பட்டினம், திருவள்ளூர், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள் 4 பேர் மற்றும் கழக நட்சத்திரப் பேச்சாளர் நடிகை ஆர்த்தியின் தாயார் ஆகியோர் மறைவு குறித்து, கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஈரோடு புறநகர் மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் திரு. S.R. முனியப்பன், நாகப்பட்டினம் மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு துணைத் தலைவர் திரு. M. சபீர் அகமது, திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் திருமதி A. ராணி, சிவகங்கை மாவட்டம், கல்லல் ஒன்றிய இலக்கிய அணித் தலைவர் திரு. U. மனோகரன் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். திரு. முனியப்பன், திரு. சபீர் அகமது, திருமதி ராணி, திரு. மனோகரன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்தோர்களது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், அ.இ.அ.தி.மு.க நட்சத்திரப் பேச்சாளர் நடிகை ஆர்த்தியின் தாயார் திருமதி ஜி. சரோஜினி, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். தாயாரை இழந்து வாடும் அன்புச் சகோதரி நடிகை ஆர்த்திக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00