முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி மும்முரம் - அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வழங்கினர்

Aug 29 2015 6:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, தமிழகம் முழுவதும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள், மிதிவண்டிகள் மற்றும் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வழங்கினர்.

தேனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைப்படி, கூட்டுறவுத்துறை மூலம், ஆயிரத்து 170 பயனாளிகளுக்கு 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடனுதவிகளை, அமைச்சர்கள் திரு. ஒ. பன்னீர்செல்வம், திரு. செல்லூர் கே. ராஜு ஆகியோர் வழங்கினர். சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட குருங்குளம், காசநாடு புதூர், ஆம்பலாபட்டு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 9,100 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மின் விசிறிகளை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம் வழங்கினார். ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட கரைமீண்டார்கோட்டை, பாய்ச்சூர் கிராமங்களில் 100 குடும்பங்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்களையும், மேலையூர், திருக்கானூர்பட்டி உள்ளிட்ட கிராமங்களச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு விலையில்லா வெள்ளாடுகளையும் அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர், திருப்பாலப்பந்தல், சித்தலிங்கமடம் ஆகிய இடங்களில் நடைபெற்ற விழாவில், ஆயிரத்து 245 மாணவ-மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் திரு. P. மோகன் வழங்கினார்.

நாகை மாவட்டம் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட திருவாவடுதுறை மற்றும் சீர்காழி தொகுதிக்குட்பட்ட கொடிக்கால்பாளையம் ஆகிய இடங்களில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகளை அமைச்சர் திரு. கே.ஏ. ஜெயபால் வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர்.கே. பாரதிமோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைக்கிணங்க, திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 30 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள் திரு. B.V. ரமணா, திரு. எஸ். அப்துல்ரகீம், கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர். P. வேணுகோபால் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெட்ரோல் ஸ்கூட்டர்களைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவத்துக் கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட அவளூர் தொகுதியில் 3 ஆயிரம் பயனாளிகளுக்கு, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகளை அமைச்சர் திரு. T.K.M. சின்னையா வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

விழுப்புரம் வடக்கு மாவட்டக்கழக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில், கோலியனூரில், கழக அரசின் சாதனைகள விளக்கும் பிரசுரங்கள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. விழுப்புரம் வடக்கு மாவட்டக்கழக செயலாளர் டாக்டர். லட்சுமணன் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 13 அரசு மேல்நிலைப்பள்ளிகள், சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட சமயநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி அரசு மேல்நிலப்பள்ளியில் 175 மாணவ-மாணவிகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுமார் ஆயிரத்து 700 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கப்பட்டன. தமிழக வீட்டுவசதி வாரியத் தலைவர் திரு. முருகையா பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. K.R.P.பிரபாகரன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சிக்குட்பட்ட ஸ்டோன்ஹவுஸ், தலையாட்டி மந்து உள்ளிட்ட பகுதிகளில், 2,200 பயனாளிகளுக்கு, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்காந்த அடுப்புகளை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. கே.ஆர். அர்ஜுனன், தாட்கோ தலைவர் திரு. எஸ். கலைச்செல்வன் உள்ளிட்டோர் வழங்கினர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் நடைபெற்ற அரசு விழாவில் ஆயிரத்து 623 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு செஞ்சி சேவல் ஏழுமலை வழங்கினார். கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 200 பயனாளிகளுக்கு, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறிகள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00