முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, தமிழகம் முழுவதும் அ.இ.அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் : அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

Aug 29 2015 6:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணைப்படி, அ.இ.அ.தி.மு.க. அரசின் நான்காண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள், தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள், மாநிலம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பங்கேற்று, வீடுவீடாகச் சென்று, கழக அரசின் சாதனை விளக்க பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதி அ.இ.அ.தி.மு.க. சார்பில், சேங்கல், பழைய ஜெயங்கொண்டம், மாயனூர் உள்ளிட்ட 10 இடங்களில் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. மக்களவை துணை சபாநாயகர் டாக்டர். மு. தம்பிதுரை, தலைமைக் கழகப் பேச்சாளர் நடிகர் ஆனந்தராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக்கழக மகளிர் அணி சார்பில், குன்றத்தூரில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான கழக அரசின் சாதனைகளை விளக்கும் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அமைச்சர்கள் திரு. R.B. உதயகுமார், திரு. B.V. ரமணா மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருச்சி மாநகரில், சுப்பிரமணியபுரம், நத்தர்ஷா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் கழக அரசின் சாதனை விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. அரசு தலைமைக் கொறடா திரு. ஆர். மனோகரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்டம் மேல்விசாரம் நகரக் கழகம் சார்பில், கத்தியவாடி பகுதியில், கழக அரசின் சாதனைகளை விளக்கி தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாநகர் மாவட்டக்கழகம் சார்பில், கழக அரசின் சாதனைகளை விளக்கி, நெல்லை சந்திப்பு பகுதியில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில், நாடாளுமன்ற மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. முத்துக்கருப்பன் எம்.பி., மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெரம்பலூர் நகரகழகம் சார்பில், அரணாரையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில், ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருவண்ணாமல தெற்கு மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி சார்பில், கழக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00