தமிழகம் முழுவதிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - மாவட்டந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

Aug 4 2015 11:19AM
எழுத்தின் அளவு: அ + அ -

மழைக்காலம் தொடங்குவதையொட்டி, தமிழகம் முழுவதிலும் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவதை தடுக்க, சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

வடகிழக்கு பருவமழையையொட்டி, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்க, மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ள வருகின்றன. அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டத்தில் கிராமம் முதல் அனைத்துப்பகுதிகளிலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோய் தாக்குதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை சுகாதார பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கி வருகின்றனர். இதேபோல், மயிலாடுதுறையிலும் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை நகராட்சி நிர்வாகத்துறையின் மண்டல இயக்குனர் திருமதி. சாந்தி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடமும் அவர் கருத்துவகளை கேட்டறிந்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00