முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கும் பணி தீவிரம்

Aug 4 2015 8:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளி மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு, தேவி நகர் பகுதிகளைச் சேர்ந்த 3 ஆயிரத்து 604 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர்கள் திரு. B.V. ரமணா, திரு. S. அப்துல் ரஹீம் ஆகியோர் வழங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 236 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், ஆயிரத்து 613 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன.

இதேபோல் அருப்புக்கோட்டையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 916 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் 230 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளும், வண்டிச்சோலை, காந்திநகர் உள்ளிட்ட பகுதிகளில், 420 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்காந்த அடுப்புகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00