முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகத்தில் செயல்படுத்தி வரும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசு பாராட்டு

Aug 3 2015 10:59AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழகத்தில் செயல்படுத்தி வரும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு, நாடாளுமன்ற மக்களவையில் இன்று மத்திய அரசு பாராட்டுத் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை இன்று கூடியதும், லலித்மோடி விவகாரம் மற்றும் வியாபம் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியிருக்கும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் முதலமைச்சர்கள் வசுந்தரா ராஜே சிந்தியா, சிவராஜ்சிங் சவுகான் ஆகியோரை பதவிநீக்கம் செய்யவேண்டும் என மீண்டும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதற்கிடையே, அவைத்தலைவர் சுமித்ரா மகாஜன் கேள்வி நேரத்தை தொடர்ந்து நடத்திய போது, அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு. திருத்தணி கோ. அரி எழுந்து, தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சிறப்பாகச் செயல்படுத்தி வரும் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நடவடிக்கைகளை பிற மாநிலங்களும் கடைப்பிடிக்கச் செய்ய மத்திய அரசு முன்வருமா எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திரு.பண்டாரு தத்தாத்ரேயா, தமிழக அரசு நல்லெண்ணத்துடன் செயல்படுத்தி வரும் திட்டங்களை பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00