ராமேஸ்வரத்தில் டாக்டர் அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு மின்விளக்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றி

Aug 3 2015 10:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமேஸ்வரத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களின் வசதிக்காக, மேற்கூரை அமைக்கப்பட்டு, மின்விளக்குகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரும், விஞ்ஞானிகளுக்கு மிகவும் உந்து சக்தியாக விளங்கியவருமான பாரத ரத்னா டாக்டர் A.P.J. அப்துல்கலாம், கடந்த வாரம் திடீரென மரணமடைந்தார். அவரது உடல், ராமேஸ்வரம் அருகே உள்ள பேய்க்கரும்பு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. டாக்டர் அப்துல் கலாமின் மறைவுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். தனது பேச்சினாலும், கருத்துகளாலும், இளைய தலைமுறையினரையும், மாணவர்களையும் கவர்ந்த டாக்டர் அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15ம் நாள் "இளைஞர் எழுச்சி நாளாக" தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் என்றும், டாக்டர் அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் விதமாக, விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர் நலனுக்காக பாடுபட்டுவரும் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, இந்த ஆண்டு முதல், சுதந்திர தினத்தன்று "டாக்டர் A.P.J. அப்துல்கலாம் விருது" வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள், அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துகின்றனர். அவர்களின் வசதிக்காக, அப்பகுதியில் வெயில், மழையால் பாதிப்பு ஏற்டாத வகையில் தற்காலிக மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மின்விளக்கு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர். அப்துல் கலாம் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00