முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்து தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது என சென்னையில் நடைபெற்ற கழக இலக்கிய அணி கூட்டத்தில் முடிவு

Aug 3 2015 10:40AM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழகத்தில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க. 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, 6-வது முறையாக செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்றும், அதற்காக மாநிலம் முழுவதும் கிராமங்கள் தோறும், கழக இலக்கிய அணி சார்பில், பொதுமக்களை சந்தித்து கழக அரசின் சாதனைகளை எடுத்துரைத்து, தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது என்றும், சென்னையில் நடைபெற்ற கழக இலக்கிய அணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, கழக இலக்கிய அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் A.P.J. அப்துல் கலாமின் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாகக் கடைபிடிக்கப்படும் என்றும், அவரது நினைவைப் போற்றும் வகையில், இந்த ஆண்டு முதல் சுதந்திர தினத்தன்று, "டாக்டர் A.P.J. அப்துல் கலாம் விருது" என்ற ஒரு விருது வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில், தாய்-சேய் நலன் காக்கும் வகையில், பேருந்து நிலையங்களில் பாலூட்டும் தாய்மார்களின் வசதிக்காக, தனி அறைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளதற்காகவும், முதலமைச்சருக்கு, கழக இலக்கிய அணி நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.

மேலும், சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை மெட்ரோ ரயில் பயணிகள் சேவையை தொடங்கி வைத்து, மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறந்த வைத்தது - தமிழகத்தில், 12 நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக தரம் உயர்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தி, அதில் வெற்றி கண்டிருப்பது உள்ளிட்டவற்றுக்கும், முதலமைச்சருக்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, கழக அரசின் 4 ஆண்டு சாதனைகளை மாநிலம் முழுவதும் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும், பிரசுரங்கள் வாயிலாகவும், பிரச்சாரக் கூட்டங்கள் மூலமாகவும் மக்களிடம் எடுத்துரைப்பது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் அ.இ.அ.தி.மு.க. வெற்றி பெற்று, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா 6-வது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க அயராது பாடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இலக்கிய அணி நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

கழக இலக்கிய அணிச் செயலாளரும், அமைச்சருமான திருமதி. பா. வளர்மதி, கழக அமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவருமான டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்றச் செயலாளரும், தமிழ்நாடு வஃக்பு வாரியத் தலைவருமான தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00