காவேரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் 9-ம் தேதி தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு - சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை

Aug 1 2015 6:47AM
எழுத்தின் அளவு: அ + அ -

காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக மேட்டூர் அணையிலிருந்து வரும் 9-ம் தேதி முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காவேரி டெல்டா பாசனத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும், மேட்டூர் அணையில் குறைந்தபட்சம் தண்ணீர் 90 அடியாக இருக்கும் போது, குறுவை நெல் சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

தென்மேற்கு பருவ மழை கடந்த ஜூன் மாதத்தில் கர்நாடகா-கேரளா நீர் பிடிப்பு பகுதிகளில் துவங்கி பின்னர் குறைவடைந்தது- அதனால், இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி அன்று மேட்டூர் அணையில் 74.21 அடி தண்ணீர் மட்டுமே இருந்தது - மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாக இருந்ததால், அணையிலிருந்து காவேரி டெல்டா பாசனத்திற்காக நடப்பாண்டு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்து விட இயலவில்லை - கடந்த மூன்றாண்டுகளாக வழங்கியது போல், இந்த ஆண்டும் டெல்டா மாவட்டங்களில் விவசாயத்திற்கு 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கவும், திருந்திய நெல் சாகுபடி முறையைப் பின்பற்றி அதிக மகசூல் பெறும் வகையில், நடவு இயந்திரம் மூலம் நெல் நடவுப் பணிகளை மேற்கொள்ளுதல், தேவைக்கேற்ப ஜிப்சம் பயன்படுத்துதல், நெல் நுண்ணூட்டக் கலவை, உயிர் உரங்கள் பயன்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவித்தல் போன்ற திட்டங்களுக்காக 40 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலான குறுவை தொகுப்பு உதவித் திட்டத்தினை தாம் அறிவித்து அது செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜூலை மாதத்தில் ஓரளவிற்கு தென்மேற்குப் பருவ மழை காவேரி நீர்பிடிப்புப் பகுதியில் பெய்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து, இன்றைய நிலவரப்படி அணையில் 95.91 அடி தண்ணீர் உள்ளது என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

காவேரி நீர்பிடிப்புப் பகுதியில் தென்மேற்கு பருவ மழை ஆகஸ்ட் மாதத்தில் இயல்பானதாக இருக்கும் என்பதை கருதியும், கர்நாடக நீர்தேக்கங்களிலிருந்து காவேரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு உரிய பங்கு நீர் கிடைக்கப் பெறும் என்பதை எதிர்நோக்கியும், தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பை கருத்திற்கொண்டும், இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை இயல்பானதாக இருக்கும் என்பதை எதிர்நோக்கியும், சுமார் 12 லட்சம் ஏக்கர் பரப்பளவில் காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, வரும் 9-ம் தேதி முதல் பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூலைப் பெற வேண்டும் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.



அணை திறப்பு நன்றி

காவேரி டெல்டா மாவட்ட விவசாயிகள், சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக, மேட்டூர் அணையில் இருந்து, வரும் 9-ம் தேதி முதல், பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு விவசாய சங்கத்தினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00