தருமபுரி அருகே வாழைத்தோட்டத்தில் பதுங்கி பொதுமக்களை அச்சுறுத்திய சிறுத்தையை, 5 மணிநேரம் போராடி வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்

Jul 31 2015 6:35AM
எழுத்தின் அளவு: அ + அ -

தருமபுரி மாவட்ட வனப்பகுதியிலிருந்து சிறுத்தை ஒன்று அதியமான்கோட்டை வாழைத்தோட்டத்திற்குள் புகுந்தது. இந்நிலையில், வாழைத்தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் இருவரை சிறுத்தை தாக்கியது. தப்பி வந்த விவசாயிகள் அளித்த தகவலின் பேரில், வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் வலை மற்றும் கூண்டுடன் சிறுத்தையை பிடிக்க முயற்சி மேற்கொண்டனர். அப்போது, வாழைத்தோட்டத்திற்குள் பட்டாசுகளை வீசி சிறுத்தையை வெளியே வரவழைத்து பிடிக்க முயன்றனர். ஆனால், சிறுத்தை வெளியேறி நெற்பயிர்களுக்குள் பதுங்கியது. தொடர்ந்து அங்கிருந்து குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையை, பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் வலையை வீசி மடக்கி பிடித்தனர். சுமார் 5 மணிநேர போராட்டத்திற்கு பின், கூண்டுக்குள் அடைக்கப்பட்ட சிறுத்தை, ஒகேனக்கல் வனப்பகுதியில் விடப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00