முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி, பவானி சாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது - சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெற நடவடிக்கை - விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

Jul 31 2015 9:24AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களின் வாயிலாக முதல்போக பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை நிறைவேற்றும் வகையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்களின் வாயிலாக முதல்போக பாசனத்திற்கு இன்று முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார். இதன்படி, இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு. எஸ். பிரபாகர், பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். இதன் மூலம், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களில் 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00