முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளால் சரணாலயங்களில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்

Jul 29 2015 9:20AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளால், சரணாலயங்களில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பாபநாசம் வனப்பகுதியில் அமைந்துள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா வரும் 14-ம் தேதி விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த விழாவில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்வது வழக்கம். இதனையொட்டி, பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இதில், களக்காடு-முண்டந்துறை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் திரு. வெங்கடேஷ் தலைமையில் வன அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், திருவிழாவின்போது, பக்தர்களுக்கு வழங்கப்படவேண்டிய பாதுகாப்பு மற்றும் வன விலங்குகளுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த திரு. வெங்கடேஷ், முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு வன விலங்குகளைப் பாதுகாக்க மேற்கொண்டுவரும் சிறப்பு நடவடிக்கைகளால் காடுகளில் உள்ள புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், 2006ம் மற்றும் 2010ம் ஆண்டுகளில் முறையே 76 மற்றும் 163 புலிகளாக இருந்த எண்ணிக்கை, 2014ம் ஆண்டு 229 ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00