முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் உடல் அடக்கம், நாளை ராமேஸ்வரத்தில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறுகிறது - இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் தமிழக அமைச்சர்கள் ஆய்வு - பொதுமக்கள் அஞ்சலி செலுத்த சிறப்பு ஏற்பாடுகள்

Jul 29 2015 10:03AM
எழுத்தின் அளவு: அ + அ -

மறைந்த டாக்டர் அப்துல் கலாமின் உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படுவதையொட்டி, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் இடத்தை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, தமிழக அமைச்சர்கள் பார்வையிட்டு, ஆய்வு நடத்தினர். டாக்டர் அப்துல் கலாமின் உடல், மதுரைக்கு வந்தபோது, விமான நிலையத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாமின் இறுதிச் சடங்கு நாளை அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெறுகிறது. ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கீழகாடு என்ற பகுதியில் அப்துல் கலாமின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஏராளமானோர் கலந்துகொள்வார்கள் என்பதால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் சிரமமின்றி அஞ்சலி செலுத்தும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர். இதனைத்தொடர்ந்து தேகரும்பு என்ற இடத்தில், அப்துல் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, அமைச்சர்கள் திரு. ஓ. பன்னீர் செல்வம், திரு. இரா. விசுவநாதன், திரு. ஆர். வைத்திலிங்கம், திரு. எடப்பாடி கே. பழனிசாமி, திரு. பி. பழனியப்பன், திரு. எஸ். சுந்தரராஜ், திரு. ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

ராமேஸ்வரத்தில் டாக்டர் அப்துல் கலாமின் உடலுக்கு பொதுமக்கள் இன்று அஞ்சலி செய்துகின்றனர். இதனைத்தொடர்ந்து நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00