சுவாமி விவேகானந்தரின் 113-வது ஆண்டு நினைவு தினம் : கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திராவில் அன்ன பூஜை நடைபெற்றது

Jul 4 2015 11:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

சுவாமி விவேகானந்தரின் 113-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திராவில் 20 டன் அரிசியை மலைபோல் குவித்து, அன்ன பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் 4-ம் தேதி மகாசமாதி அடைந்தார். அவரது 113-வது ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உரையாற்ற செல்வதற்கு முன்பாக, கன்னியாகுமரி கடல் நடுவே உள்ள பாறை மீது அமர்ந்து தியானம் செய்தார். அவர் தியானம் செய்த பாறை மீது சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, அதனை விவேகானந்த கேந்திரா பராமரித்து வருகிறது. இந்நிலையில், சுவாமி விவேகானந்தரின் 113-வது ஆண்டு நினைவு தினம் இன்று விவேகானந்த கேந்திராவில் அனுசரிக்கப்பட்டது. கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பொதுமக்களிடமிருந்து தானமாக பெற்ற 20 டன் அரிசியை மலைபோல் குவித்து, அன்ன பூஜை நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில், மாணவ, மாணவியர் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00