செம்மண் குவாரி முறைகேட்டில் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கு : தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்

Jul 4 2015 11:11AM
எழுத்தின் அளவு: அ + அ -

செம்மண் குவாரி முறைகேட்டில் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

முந்தைய தி.மு.க ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தனது மகன் கவுதமசிகாமணி மற்றும் உறவினர்களுக்கு, பூந்துறை கிராமத்தில் செம்மண் குவாரி நடத்த அனுமதி வழங்கினார். விதிமுறையை மீறி 90 அடி ஆழத்திற்கு செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, வானூர் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மாவட்ட போலீசார், பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி, உறவினர்கள் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை இன்று விழுப்புரம் முதன்மை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி நேரில் ஆஜரானார். ஆனால், பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 2 பேர் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி திரு. சரவணன் உத்தரவிட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00