சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றிச் சான்றிதழ் : அ.இ.அ.தி.மு.க. சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது

Jul 4 2015 10:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவிடம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளராக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா போட்டியிட்டார். ''மக்களால் நான், மக்களுக்காகவே நான்'' என்ற தாரக மந்திரத்துடன் கடந்த மாதம் 22-ம் தேதி இத்தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, 2 இடங்களில் பேருரை நிகழ்த்தி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.

இதனைத்தொடர்ந்து, 27-ம் தேதி பதிவான வாக்குகள் 30-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 432 வாக்குகள் பெற்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வரலாற்று சாதனை படைத்தார். முதலமைச்சரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்த நிலையில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெற்றி மகுடம் சூடினார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதாவிடம் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்தநிகழ்வின் போது, நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு. நத்தம் ஆர்.விசுவநாதன், வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பி. பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. பு. வெற்றிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00