சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இமாலய வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெயலலிதா, சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு : சட்டமன்ற உறுப்பினருக்கான உறுதிமொழியும் ஏற்பு

Jul 4 2015 10:16AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இமாலய வெற்றி பெற்ற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சட்டமன்ற உறுப்பினராக இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற தொகுதியில் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 722 வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெற்றி மகுடம் சூடினார். இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்காக இன்று தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தபோது, அவரை சட்டப்பேரவைத் தலைவர் திரு.ப.தனபால், தமிழக அரசு தலைமைச் செயலாளர் திரு.கு. ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர் திருமதி.ஷீலாபாலகிருஷ்ணன், சட்டப்பேரவை செயலாளர் திரு. A.M.J. ஜமாலுதீன், முதலமைச்சர் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி இன்னசென்ட் திவ்யா மற்றும் காவல்துறை டி.ஜி.பி. திரு. அசோக்குமார், காவல்துறை ஆணையர் திரு. ஜார்ஜ் ஆகியோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் அறைக்கு வருகை தந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை சட்டப்பேரவை தலைவரிடம் வழங்கினார். அப்போது, அங்கிருந்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் கரவொலி எழுப்பி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவர் முன்னிலையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினருக்கான பதவியேற்பு உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது, சட்டப்பேரவை துணைத் தலைவர், அனைத்து அமைச்சர்கள், அரசு தலைமைக் கொறடா, மக்களவை துணை சபாநாயகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00