முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவையடுத்து, மாநிலம் முழுவதும் பயனாளிகளுக்கு விலையில்லா நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்

Jul 4 2015 7:02AM
எழுத்தின் அளவு: அ + அ -

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவையடுத்து, மாநிலம் முழுவதும் பயனாளிகளுக்கு விலையில்லா நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சின்னபாபுசமுத்திரம், தாண்டவமூர்த்திக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 4,300 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை, மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் லட்சுமணன் வழங்கினார். விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். ராஜேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜானகிராமன் மற்றும் அரசு அதிகாரிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

நாகை மாவட்டம் திருக்கடையூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 1,563 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர்.கே. பாரதிமோகன், சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். பவுன்ராஜ் ஆகியோர் வழங்கினர். இதேபோல், ராதாநல்லூரைச் சேர்ந்த 1,370 பயனாளிகளுக்கு விலையில்லா நலத்திட்டங்களை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ம. சக்தியும், மன்னம்பந்தம் ஊராட்சியைச் சேர்ந்த 1,369 பயனாளிகளுக்கு விலையில்லா நலத்திட்ட உதவிகளை மயிலாடுதுறை ஒன்றியக்குழுத்தலைவர் திரு. பா. சந்தோஷ்குமார் ஆகியோர் வழங்கினர்.

இதேபோல், வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புஷ்பவனம் கிராமத்தைச் சேர்ந்த 1,954 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை சட்டமன்ற உறுப்பினர் திரு. காமராஜ் வழங்கினார்.

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 2,506 பயனாளிகள் மற்றும் சிந்தலவாடி ஊராட்சி பகுதிகளைச் சேர்ந்த 2,388 பயனாளிகள் என மொத்தம் 4,894 பேருக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை மாவட்ட ஆட்சியர் திருமதி. ச. ஜெயந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர்.பி. மருதைராஜா, சட்டன்ற உறுப்பினர் திரு. பாப்பாசுந்தரம் ஆகியோர் வழங்கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடமாண்டபட்டி, அந்தேரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 4,194 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 71 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா நலத்திட்ட உதவிகளை நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அசோக்குமார், சட்டமன்ற உறுப்பினர் திருமதி. மனோரஞ்சிதம் ஆகியோர் வழங்கினர்.

இதனிடையே, தேனியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவியர்களுக்கு நகராட்சி சார்பில், நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கப்பட்டது. இதேபோல், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் நிலவேம்பு சாறு வழங்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில், ஆதார் அட்டை பெற்றுள்ள 31 லட்சம் பேருக்கும் பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்பட்ட ஆதார் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக மாவட்டத்தில் உள்ள 11 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியை மேற்பார்வையிட்டு வரும் மாவட்ட ஆட்சியர் முனைவர் இரா. நந்தகோபால், காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு நடத்தியதுடன், பொதுமக்களுக்கு பிளாஸ்டிக்கிலான புதிய ஆதார் அட்டைகளை வழங்கினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00