மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலான சிறந்த கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட 14 பிரிவுகளில், மத்திய அரசு வழங்கப்படும் தேசிய விருதுகளுக்கு, வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : தமிழக அரசு அறிவிப்பு

Jul 2 2015 6:21AM
எழுத்தின் அளவு: அ + அ -

மாற்றுத் திறனாளிகளின் மறுவாழ்வுக்காக சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர் மாற்றுத் திறன் கொண்ட பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலான சிறந்த கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட 14 பிரிவுகளில், மத்திய அரசு வழங்கப்படும் தேசிய விருதுகளுக்கு, வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி புதுடெல்லியில் இந்த விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின், சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் அமைச்சகத்தால், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்கென சிறப்பாகச் செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு தேசிய விருதுகள், வரும் டிசம்பர் மாதம் 3-ம் தேதி புதுடெல்லியில் வழங்கப்படவுள்ளன.

அதன்படி, மாற்றுத் திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிபவர்கள், சுயதொழில் புரிபவர்கள், சிறந்த பணியமர்த்தப்படும் அலுவலர் மற்றும் நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பாக சேவை புரிந்த தனிநபர் மற்றும் நிறுவனம், மாற்றுத் திறனாளிகளில் முன்னோடியாகத் திகழ்பவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையிலான சிறந்த செயல்முறை ஆராய்ச்சி, தொழில் நுட்பம் அல்லது கண்டுபிடிப்புகள், மாற்றுத் திறனுடையோருக்கு தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்திய சிறந்த பணி, மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கிய சிறந்த மாவட்டம், தேசிய மாற்றுத் திறனுடையோர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் திட்டத்தினை செயல்படுத்தும் மாநில அளவிலான முறைப்படுத்தும் நிறுவனம், சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனுடையவர்கள், சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனாளி குழந்தைகள், சிறந்த பிரெய்லி அச்சகம், மாற்றுத் திறனாளிகள் எளிதில் பயன்படுத்தக்கூடிய சிறந்த இணையதளம், மாற்றுத் திறனாளிகளின் அதிகாரப் பகிர்வினை ஊக்கப்படுத்தும் சிறந்த மாநிலம் மற்றும் சிறந்த மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர் ஆகிய 14 பிரிவுகளில் தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அல்லது நிறுவனங்கள் அதுதொடர்பான விவரங்களை www.disabilities.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் - மேலும், உரிய விண்ணப்பப் படிவத்தை இந்த இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அல்லது சென்னையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகதில் இருந்தோ பெற்று, தக்க இணைப்புகளுடன் வரும் 10-ம் தேதிக்குள் 2 நகல்களில், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரின் பரிந்துரையுடன் சென்னை கே.கே. நகரில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 10ம் தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00