கருணாநிதி பேரன் தயாநிதிமாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, பி.எஸ்.என்.எல். அதிவேக இணைப்புகளை சட்டவிரோதமாக சன் டி.வி.க்கு பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்ட விவகாரம் : டெல்லியில், தயாநிதிமாறனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை

Jul 2 2015 6:09AM
எழுத்தின் அளவு: அ + அ -

கருணாநிதி பேரன் தயாநிதிமாறன் மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, மத்திய அரசின் BSNL நிறுவனத்துக்கு சொந்தமான 300-க்கும் மேற்பட்ட அதிவேக I.S.D.N. இணைப்புகளை சட்டவிரோதமாகப் பெற்று, தனது குடும்ப தொலைக்காட்சியான சன் டி.வி.க்கு முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கில், தயாநிதிமாறனிடம் டெல்லியில் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறன், கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2007 வரை, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது, சென்னையில் உள்ள தனது ஆடம்பர வீட்டிற்கு, BSNL நிறுவனத்தின் 300-க்கும் மேற்பட்ட அதிவேக I.S.D.N. இணைப்புகளை சட்டவிரோதமாகப் பெற்று, தனது சகோதரர் கலாநிதிமாறனின் சன் நெட்வொர்க் நிறுவனப் பயன்பாட்டிற்கு அதனை முறைகேடாகப் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த சி.பி.ஐ., தயாநிதிமாறன், BSNL முன்னாள் பொதுமேலாளர் பிரம்மநாதன், துணைப் பொதுமேலாளர் வேலுச்சாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் தயாநிதிமாறனின் தனிச்செயலாளர் கெளதமன், சன் டி.வி. தொழில்நுட்ப மேலாளர் கண்ணன், மின்சாரத்துறை ஊழியர் ரவி ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீன் பெற்றுள்ளனர்.

B.S.N.L. அதிவேக இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தி, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், தயாநிதிமாறனிடம் விசாரணை நடத்த, அவர் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் முன்னிலையில், நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. நேற்று ஆஜராகும்போது, தன்னை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில், தயாநிதிமாறன் சென்னையில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் சரணடைந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் பெற்றார்.

இதனைத்தொடர்ந்து, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் தயாநிதிமாறன் நேற்று விசாரணைக்காக ஆஜரானார். B.S.N.L. அதிவேக இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகளை சி.பி.ஐ. அதிகாரிகள் துருவித் துருவி கேட்டதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ள மனுவில், B.S.N.L. அதிவேக இணைப்புகளை, தயாநிதிமாறன், சட்டவிரோதம் என்று தெரிந்திருந்தும் அவற்றை முறைகேடாக தனது குடும்பத் தொலைக்காட்சிக்குப் பயன்படுத்தியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00