இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ. 1.25 லட்சம் மோசடி நபரை டெல்லி சென்று கைது செய்த தமிழக சைபர் கிரைம் போலீசார்

Dec 9 2023 11:05AM
எழுத்தின் அளவு: அ + அ -

இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை டெல்லியில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். டெல்லி மாநிலம் உத்தம் நகரில் வசிப்பவர் அலெக்ஸ் பாண்டியன். ஆன்லைன் மூலமாக வேலை தேடுவோரின் தொலைபேசி எண்களை எடுத்து அவர்களிடம் இண்டிகோ நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை காட்டியுள்ளார். இதனை நம்பிய அயனாவரம் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார், அலெக்ஸிடம் ஆன்லைன் மூலமாக ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். பதிலுக்‍கு போலி நியமன கடிதம் கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார், சென்னை சேத்துப்பட்டு கிழக்கு மண்டல சைபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சைபர் கிரைம் ஆய்வாளர் பத்ம குமாரி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, டெல்லியில் பதுங்கி இருந்த அலெக்ஸ் பாண்டியனை கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00