சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசு தேவையான உதவிகளை செய்யாத நிலையில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து உணவு வழங்கி வரும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கும் மக்கள்

Dec 8 2023 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ளம் போல் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், மழை நின்று, 4 நாட்களாகியும் வெள்ள நீர் இன்னும் அகற்றப்படாததால் பொதுமக்‍கள் மிகுந்த இன்னலுக்‍கு ஆளாகி வருகின்றனர். மக்‍கள், வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாமலும், குடிநீர், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமலும் அவதிப்படுகிறார்கள். திமுக அரசும், உள்ளாட்சி நிர்வாகமும் நிவாரண நடவடிக்‍கைகளை மேற்கொள்ளாத நிலையில், பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍கு, அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, தொடர்ந்து 7வது நாளாக உணவுகள் வழங்கி வருகிறார்.

பருவமழை தீவிரம் அடைந்ததாலும், வங்கக்‍ கடலில் புயல் உருவானதாலும், சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்தது. தமிழக அரசும் மாநகராட்சி நிர்வாகமும் மழைநீர் வடிகால் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ளாததால், சென்னை மாநகரின் பல பகுதிகள் இன்னும் மழை வெள்ள நீரில் மிதக்‍கின்றன. தாழ்வான இடங்களில் பெருமளவில் மழைநீர் தேங்கி, வெள்ளக்‍ காடாக காட்சி அளிக்‍கின்றன. குடியிருப்பு பகுதிகளைச் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்து குளம் போல் காணப்படுகிறது. மழைநீர் அகற்றப்படாததால், பொதுமக்‍கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பெரும் இன்னலுக்‍கு ஆளாகி தவிக்‍கிறார்கள். அத்தியாவசிய தேவைகளுக்‍காகக்‍கூட, வெளியே செல்ல முடியாமல் மக்‍கள் வீடுகளுக்‍குள் முடங்கிக்‍ கிடக்‍க வேண்டிய அவலநிலை எற்பட்டுள்ளது. பல இடங்களில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்திருப்பதால், சுற்றுச் சூழலும் சுகாதாரமும் சீர்கெட்டுப் போய், தாங்க முடியாத அளவுக்‍கு துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்‍கள் குற்றம் சாட்டுகின்றனர். வீடுகளுக்‍குள் மழைநீர் புகுந்ததால், மக்‍களின் இயல்பு வாழ்க்‍கை ஸ்தம்பித்துள்ளது. பல இடங்களில் துண்டிக்‍கப்பட்ட மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்படாததால், மக்‍கள் பெரும் இன்னலுக்‍கு ஆளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதிகள் மற்றும் தெருக்‍களில் வெள்ளம்போல் சூழ்ந்திருக்‍கும் மழை நீரை அகற்றவும், பாதிக்‍கப்பட்டோருக்‍கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய உதவிகள் வழங்கவும் தமிழக அரசோ, மாநகராட்சி நிர்வாகமோ எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என, இன்னல்படும் மக்‍கள் வேதனையுடன் தெரிவிக்‍கிறார்கள்.

இந்நிலையில், மக்‍களின் துயரங்கள் பற்றி தகவல் அறிந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, பல இடங்களிலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்‍களுக்‍கு, கடந்த பல தினங்களாக உணவுகள் வழங்கி வருகிறார். தொடர்ந்து 7வது நாளாக, சென்னை பெருங்குடி கே.பி.கே. நகர், சந்தியா நகர் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா உணவுகள் வழங்கினார்.

அமைச்சர்கள், அரசு மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் யாரும், பாதிக்‍கப்பட்ட தங்களை வந்து பார்க்‍காத நிலையில், புரட்சித்தாய் சின்னம்மா, தங்கள் நிலையை உணர்ந்து, பரிவோடும், அன்போடும் உணவுகள் வழங்கியதற்காக, பொதுமக்‍கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.

சென்னையை அடுத்த பூந்தமல்லி பகுதியில், முல்லா தோட்டம், பாபாதி தர்கா, அம்மா நகர், கீழ் மாநகர், மேல் மாநகர் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்‍கு ஆளாகியுள்ள மக்‍களுக்‍கு, கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா உணவுகள் வழங்கினார். வீடு, வீடாக உணவு வழங்கப்பட்டது. குடிநீர், உணவு ஆகியவற்றுக்‍கு வழியின்றி இன்னல்பட்டு வந்த தங்களுக்‍கு, தாயுள்ளத்தோடு உணவுகள் வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு அப்பகுதி மக்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

சென்னை வியாசர்பாடி முல்லை நகர், சத்தியமூர்த்திநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளநீர் சில இடங்களில் வடிந்திருந்தாலும், இயல்பு வாழ்க்‍கை, தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் ஏதுமின்றி மக்‍கள் இன்னல்பட்டு வருகின்றனர். திமுக அரசோ, உள்ளாட்சி நிர்வாகமோ தங்களின் துயர் துடைக்‍க எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கவில்லை என்று மக்‍கள் கண்ணீர் மல்க தெரிவிக்‍கிறார்கள். இந்நிலையில், அவதிப்படும் மக்‍களுக்‍கு புரட்சித்தாய் சின்னம்மா உணவுகள் வழங்கினார். இதற்காக பொதுமக்‍கள் தங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.

தாம்பரத்தை அடுத்த முடிச்சூர் அஞ்சு நகர், சமத்துவ பெரியார்நகர் உள்ளிட்ட இடங்களில் கடந்த 5 நாட்களாக மின்சார விநியோகம் துண்டிக்‍கப்பட்டுள்ளதால், மக்‍கள் மிகுந்த இன்னலுக்‍கு ஆளாகியுள்ளனர். மழை வெள்ள நீரில் அவதிப்படும் மக்‍களுக்‍கு குடிநீர், உணவு எதுவும் கிடைக்‍காத நிலையில், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, உணவுகள் வழங்கினார். திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட யாரும் தங்களுக்‍கு எந்த உதவியும் செய்யாத நிலையில், தங்கள் பசியைப் போக்‍க உணவுகள் வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மா மிகவும் பாராட்டுக்‍குரியவர் என்றும், அவருக்‍கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும், உணவுகளை பெற்றுக்‍ கொண்ட மக்‍கள் நெஞ்சம் நெகிழ கூறினார்கள்.

சென்னை வியாசர்பாடி தாமோதரன் நகர், குமரன் நகர், செல்வவிநாயகம் தெரு, ஆறுமுகம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு, குடீநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் கிடைக்‍காமல், மழை வெள்ள நீரில் மக்‍கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில், பாதிக்‍கப்பட்ட மக்‍களுக்‍கு உணவு, குடிநீர், மெழுகுவர்த்திகள் ஆகியவற்றை புரட்சித்தாய் சின்னம்மா வழங்கினார். அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட யாரும் தங்களைப் பார்க்‍க வரவில்லை என்றும், இந்த நேரத்தில் தங்கள் பரிதாப நிலையை அறிந்து, புரட்சித்தாய் சின்னம்மா உணவுகள் வழங்கியது, தங்களுக்‍கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அப்பகுதி மக்‍கள் தெரிவித்தனர்.

இப்பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்ததால், துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் அபாயம் ஏற்படக்‍கூடும் என்ற அச்சத்தில் மக்‍கள் இருக்‍கிறார்கள். மழை வெள்ள நிவாரண நடவடிக்‍கைகளை திமுக அரசு முறையாக மேற்கொள்ளவில்லை என்றும், தங்கள் வீடுகளைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்திருப்பதால், பள்ளிக்‍கூடங்கள் மற்றும் மண்டபங்களில் தங்கி இருப்பதாகவும், தங்களுக்‍கு உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களைக்‍ கூட திமுக அரசோ, அதிகாரிகளோ வழங்கவில்லை என்றும் பொதுமக்‍கள் புகார் தெரிவித்தனர்.

தாம்பரம் கிஷ்கிந்தா சாலையில் உள்ள பெரியார் நகர், வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் மக்‍கள் பாதிக்‍கப்பட்டு மிகவும் இன்னல்பட்டு வருகிறார்கள். மழை நின்று 4 நாட்கள் ஆகியும் வெள்ளநீரை அகற்ற எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கப்படவில்லை. இதனால் மக்‍களின் துயரம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் புரட்சித்தாய் சின்னம்மா இப்பகுதி மக்‍களுக்‍கு உணவு, குடிநீர், மெழுகுவர்த்தி ஆகியவற்றை வழங்கினார். இதற்காக புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு இப்பகுதி மக்‍கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். தங்கள் பகுதியில் துண்டிக்‍கப்பட்ட மின்சார விநியோகம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும், இதனால் மின் விளக்‍கு இன்றி, கைக்‍குழந்தைகளோடு தாங்கள் அல்லல்பட்டு வருவதாகவும் இப்பகுதி மக்‍கள் வேதனையுடன் தெரிவிக்‍கின்றனர்.

மேற்கு தாம்பரம் கிஷ்கிந்தா சாலை, கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால், பொதுமக்‍கள் வெளியே செல்ல முடியாமல் வீடுகளுக்‍குள்ளேயே முடங்கி இருக்‍கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவதிக்‍கு ஆளாகியுள்ள இப்பகுதி மக்‍களின் பசியைப் போக்‍க புரட்சித்தாய் சின்னம்மா, உணவு, குடிநீர், மெழுகுவர்த்தி ஆகியவற்றை வழங்கினார். தங்கள் மீது பரிவும் அன்பும் கொண்டு உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்கிய புரட்சித்தாய் சின்னம்மாவுக்‍கு இப்பகுதி மக்‍கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00