ஐ.டி. அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 4 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனு : வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு டிச.6ம் தேதிக்கு மனு ஒத்திவைப்பு

Nov 28 2023 7:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 4 பேரின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி வருமான வரித்துறை சார்பில் தொடரப்பட்ட வழக்கில் வீடியோ ஆதாரங்களை ஒப்படைக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர் வீடுகளில் நடந்த சோதனையின் போது வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கி முக்கியமான ஆவணங்கள் பறித்துச்சென்றதாக புகார் தெரிவிக்கப்பட்டது . இது தொடர்பாக கைதான 15 பேர் ஜாமீன் பெற்றனர். இதில் குறிப்பாக, ரீகன், ராஜா, சரவணன், ராமச்சந்திரன் உள்ளிட்ட 4 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யகோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி சிவஞானம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி , வீடியோ ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை டிசம்பர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00