தமிழகம் - கர்நாடகம் இடையே காவிரிப் பிரச்சனை, பற்றி எரியும் சூழலில், ஒழுங்காற்றுக் குழு புதிய உத்தரவு : நாளை மறுநாள் முதல் அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட ஆணை
Sep 26 2023 6:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வரும் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 3ஆயிரம் கன அடி நீரை விடுவிக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கூடிய 87வது காவிரி நீர் ஒழுங்குமுறை குழு கூட்டத்தில், கர்நாடகா தரப்பில் மாநிலத்தில் உள்ள நான்கு அணைகளில் 53 புள்ளி பூஜ்யம் நான்கு சதவீதம் நீர்வரத்து குறைந்துள்ளதாக கூறப்பட்டது. அதே போல் மாநிலத்தில் 161 தாலுகாக்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கர்நாடக கூறியது. எனவே தங்களால் தமிழகத்துக்கு நீர் தர இயலாது என கர்நாடகம் கூறிய நிலையில், தமிழகம் தரப்பில் வறட்சி கால நீர் பங்கீட்டின் படி திறக்கப்பட வேண்டிய நீரை உடனடியாக திறந்து விட உத்தரவிடுமாறு கோரப்பட்டது. இந்நிலையில் வரும் 28ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை விநாடிக்கு 3ஆயிரம் கன அடிவீதம் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.