சங்கரன்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலைமறியல் : ஆண்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம்
Sep 26 2023 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திருவேங்கடம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சங்கரன்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு பகுதியில் மக்களுக்கு தேவையான குடி தண்ணீர், வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக ஏற்படுத்தி தராததை கண்டித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் திருவேங்கடம் செல்லும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.