தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி போராட்டத்திற்கு சென்ற கரும்பு விவசாயிகள் தடுத்து நிறுத்தம் : சாலைமறியலில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்

Sep 26 2023 5:59PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு காத்திருப்பு போராட்டத்திற்கு சென்ற கரும்பு விவசாயிகளை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். பாபநாசம் அருகே திருமணங்குடியில் இயங்கி வந்த திரு ஆருரான் தனியார் சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலை அருகே 301 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் அறிவித்த நிலையில், போலீசார் விவசாயிகளை அண்டக்குடியில் தடுத்து நிறுத்தியதால் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்கள் அனைவரையும் வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00