சேலம் அருகே இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் ஒருவர் பலி : ஓட்டுநர், நடத்துநர் தப்பி செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது
Sep 26 2023 5:51PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் தப்பி சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. மகுடஞ்சாவடி பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவர், கூடுதுறையில் கோயில் ஊழியராக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் பணி முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட குமரேசன், வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே சென்றபோது, SNB டிராவல்ஸ் பேருந்து மோதி உயிரிழந்தார். விபத்து ஏற்பட்டதையடுத்து, பேருந்தில் இருந்து இறங்கி ஓட்டுநரும், நடத்துநரும் தப்பி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.