மினி வேன் மோதியதில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் உயிரிழந்த சம்பவம் : தந்தை சாவில் மர்மம் இருப்பதாக மகன் புகார் அளித்ததால் பரபரப்பு
Sep 26 2023 5:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாம்பரம் அருகே மினி வேன் மோதிய விபத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், ஒன்றிய கவுன்சிலருமான அளவூர் நாகராஜன் உயிரிழந்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தந்தை சாவில் மர்மம் இருப்பதாக, நாகராஜின் மகன் புகார் அளித்துள்ளார். தாம்பரம் அடுத்த காமராஜபுரத்தில் உள்ள தள்ளுவண்டி கடையில் நாகராஜ் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது, மினி வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியதில் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உதயா, நிவேதன், கிஷோர் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தந்தை சாவில் மர்மம் இருப்பதாக, நாராஜனின் மகன் கௌதம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.