திண்டுக்கல் அருகே மகளிர் உரிமைத் தொகை கிடைக்காததால் வட்டாட்சியர் அலுவலகத்தில் கைக்குழந்தைகளுடன் குவிந்த பெண்கள் : நாள் முழுவதும் அலைகழிக்கப்பட்டதால் ஒருநாள் சம்பளம் பறிபோனதாக நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்கள் வேதனை
Sep 21 2023 6:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமை தொகை கிடைக்காதது குறித்து காரணம் தெரிந்து கொள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்த ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். இதில் பலர் கைக்குழந்தைகளுடன் வந்திருந்த நிலையில், ஆதார் மற்றும் செல்போன் எண்ணை பெற்றுக்கொண்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதனால் நூறுநாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் தங்களுக்கு ஒரு நாள் சம்பளம் பறிபோனதாக வேதனை தெரிவித்தனர்.