நெல்லை அருகே காலை முதலே வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்த மகளிர் உரிமைத்தொகை கிடைக்க பெறாத பெண்கள் : சர்வர் வேலை செய்யாததால் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற முதியவர்கள்
Sep 21 2023 6:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காத பெண்கள் அதற்கான கரணத்தை தெரிந்து கொள்ளவும், மறுமுறை விண்ணப்பிக்கவும் காலை 8 மணி முதலே குவிந்தனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது. இதனால் முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.