பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமீன் மனு தள்ளுபடி : விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Sep 21 2023 2:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்க, காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் பகுதியில் சாகசம் செய்தபோது, டிடிஎஃப் வாசன் விபத்தில் சிக்கினார். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிடிஎஃப் வாசனை போலீசார் கைது செய்தனர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவது, கவனக்குறைவாக செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.