கோவை மத்திய சிறையில் காவலர்கள் மற்றும் கைதிகளுக்கு இடையே மோதல் : 4 சிறை காவலர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி
Sep 21 2023 2:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவை மத்திய சிறையில் காவலர்கள் மற்றும் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்தனர். கோவை மத்திய சிறையில் இருந்த கைதிகள் சிறைக்காவலர்களை வம்பிழுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் கடும் மோதல் ஏற்பட்ட நிலையில் கைதிகள் தாக்கி, சிறைத்துறை காவலர்கள் ராகுல், மோகன்ராம், பாபு ஜான், விமல் ராஜ் ஆகிய 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் கைதிகள் சிலர் சிறை வளாகத்தில் இருந்து மரங்களில் ஏறி, பிளேடால் கையை கீறிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 7 சிறை கைதிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மோதலுக்கான காரணம் குறித்து உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.