10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஜூன் 17 ஆம் தேதி சந்திக்கிறார் நடிகர் விஜய் : தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக அறிவிப்பு

Jun 7 2023 12:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் வரும் 17ம் தேதி சந்திக்க உள்ளார்.

கடந்த மே 8ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், மே 19ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் வெளியானது. இதனையடுத்து, தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவ, மாணவிகளை விஜய் சந்திக்க உள்ளார் என்ற செய்தி வெளியானது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதியிலும் முதல் 3 இடங்களை பெற்ற மாணவர்களை நடிகர் விஜய் வரும் 17ம் தேதி சந்திக்கவுள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி, சென்னையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் அகில இந்திய தலைமை விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நடைபெற்ற உள்ளது. நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் உதவித்தொகை வழங்கி நடிகர் விஜய் கவுரவிக்க உள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00