நெல்லை அருகே கற்கள் ஏற்றிவந்த டாரஸ் லாரி மோதியதில் ஆசிரியை பலி - லாரியை சிறைபிடித்து 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
Mar 28 2023 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே லாரி மோதி ஆசிரியை உயிரிழந்த நிலையில், லாரியை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ரம்மதபுரத்தை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியை மாதவி, தனது இருசக்கர வாகனத்தில் கள்ளிகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிலாத்திகுளம் கல்குவாரியில் இருந்து கற்களை ஏற்றிவந்த டாரஸ் லாரி இருசக்கர வாகனம்மீது மோதியதில், ஆசிரியை மாதவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய லாரி ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, லாரியை சிறைபிடித்து 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.