திருப்பூர் பல்லடத்தில் குத்தகைக்கு வீடு பிடித்து தருவதாகக்கூறி ஏமாற்றிய ரியல் எஸ்டேட் புரோக்கர் - பலரிடம் லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து போலீஸ் நடவடிக்கை

Nov 26 2022 12:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் குத்தகைக்கு வீடு பிடித்து தருவதாக கூறி 40 க்கும் மேற்பட்ட நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

பல்லடத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் புரோக்கரான நவாஸ் என்பவர் அப்பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ள ஒரே வீட்டை, தன்னிடம் வீடு கேட்டு வரும் பல பேருக்கு காண்பித்து குத்தகைக்கு எனக்கூறி, லட்சக்கணக்கில் பணம் பெற்றுள்ளார். 40க்கும் மேற்பட்டவர்கள் ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 3 லட்சம் ரூபாய் வரை நேரிலும், நவாஸின் பல்வேறு வங்கிக் கணக்குகளிலும் பணம் செலுத்தியுள்ளனர். அவர் ஏற்கெனவே இதுபோல் பலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு கம்பி நீட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்த விவரம் தெரிந்ததால் ஏமாந்த பலரும் அவரை தீவிரமாக தேடினர். இந்நிலையில் திருப்பூர் கருவம்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த அவரை பாதிக்கப்பட்ட நபர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் வீட்டின் உரிமையாளராக நடித்த ரங்கராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டார். தங்கள் பணத்தை பெற்றுத்தர போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00