நியாயவிலை கடைகளுக்‍கு பொருட்கள் வழங்கியதில் வரி ஏய்ப்பு நடந்ததாக புகார் : சேலம் பருப்பு குடோனில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

Nov 26 2022 11:53AM
எழுத்தின் அளவு: அ + அ -

சேலத்தில் உள்ள ஒரு பருப்பு கிடங்கில் வருமானவரித்துறை அதிகாரிகள் பலமணி நேரமாக சோதனை நடத்தினர்.

தமிழகம் முழுவதும் அரசு நியாய விலைக் கடைகளுக்கு ஐந்து நிறுவனங்கள் மூலம் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கப்படுகிறது. இதில் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, தமிழகம் முழுவதும் சுமார் 40 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள மேட்டுவேளாளர் தெருவில் அமைந்துள்ள சந்தீப் என்பவருக்கு சொந்தமான பருப்பு கிடங்கில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.

வருமானவரித்துறை சென்னை ஆய்வாளர் வம்சி கிருஷ்ணா, தலைமையில் ஐந்துபேர் கொண்ட குழுவினர் அங்கு சோதனை நடத்த வந்தனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டது.

பின்னர் நேற்று இரவு 9 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் கிடங்கு திறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. சுமார் 400 டன் அளவிலான பருப்பு அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதற்கு முறையான ஆவணங்கள் பராமரிக்கப்படுகிறதா? ஏதாவது வரி ஏய்ப்பு நடந்துள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதிகாலை 3 மணி வரை சோதனை நடைபெற்றது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00