திருவண்ணாமலை: ஊராட்சி ஒன்றிய தொடக்‍கப்பள்ளியின் சுவற்றை இடித்த தி.மு.க.வினர் - பொதுமக்‍கள் எதிர்த்ததால் தப்பி ஓட்டம்

Oct 6 2022 6:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவண்ணாமலை மாவட்டத்தில், மக்‍கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்‍கப்பள்ளியின் இடத்தை ஆக்‍கிரமிப்பதற்காக, சுவற்றை தி.மு.க.வினர் இடித்தனர். பொதுமக்‍கள் திரண்டு எதிர்த்ததால் தொடர்ந்து இடிப்பதை கைவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

திருவண்ணாமலை அடுத்த கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குட்பட்ட நீலந்தாங்கள் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கடந்த பிப்ரவரி மாதம், 5 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில், பள்ளிக்‍கு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. பள்ளி சுற்றுச்சுவர் அமைந்துள்ள இடத்தை ஆக்‍கிரமிக்‍கும் நோக்‍கில், அந்தச் சுவரை, நீலந்தாங்கள் தி.மு.க. ஊராட்சி மன்றத் தலைவர் மணி உத்தரவின் பேரில், தி.மு.க பிரமுகர்கள் பாரதி, வெங்கட், ஜெயவேல், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட சிலர் இடித்துக்‍ கொண்டிருந்தனர். தகவல் அறிந்து அப்பகுதியில் பொதுமக்‍கள் திரண்டதை அடுத்து, அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00