சின்னத்திரை நடிகர் அரணவ், தன்னை தாக்‍கியதாக, நடிகை திவ்யா கூறிய குற்றச்சாட்டுக்கு மறுப்பு - கருவைக் கலைக்‍க நண்பருடன் சேர்ந்து திவ்யா முயற்சித்ததாக, ஆவடி காவல் ஆணையரகத்தில் அரணவ் புகார்

Oct 6 2022 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

சின்னத்திரை நடிகை திவ்யா, தனது கணவரும் சின்னத்திரை நடிகருமான அரணவ், கர்ப்பிணியான தன்னை தாக்‍கியதாக புகார் தெரிவித்துள்ளார். கருவை கலைக்‍க நண்பருடன் சேர்ந்து திவ்யா முயற்சித்ததாக, ஆவடி காவல் ஆணையரகத்தில் அரணவ் புகார் தெரிவித்துள்ளார்.

பிரபல சின்னத்திரை நடிகரான நைனா முகமது என்கிற அரணவ், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தார். இவர் திவ்யா என்ற தொலைக்காட்சி நடிகையை காதலித்து வந்தார். இஸ்லாமிய மதத்திற்கு மாறினால் மட்டுமே திருமணம் செய்து கொள்வதாக அரணவ் கூறியதால், திவ்யாவும் மதம் மாறினார். இதையடுத்து இந்து முறைப்படியும், இஸ்லாமிய முறைப்படியும் திவ்யாவை அரணவ் திருமணம் செய்து கொண்டார். கடந்த 5 மாதங்களாக திருவேற்காட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வசித்து வந்த நிலையில், தற்போது திவ்யா மூன்று மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், அரணவிற்கு வேறொரு நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டதாக வந்த தகவலையடுத்து இருவருக்‍கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

தன்னை அரணவ் பிடித்து தள்ளிவிட்டதாகக்‍ கூறி சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி திவ்யா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த தகவலின்பேரில், திருவேற்காடு போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று, நடந்த சம்பவம் குறித்து நடிகையிடம் விசாரணை நடத்தினர். அப்போது, எழுத்துப்பூர்வமான புகார் அளித்தால் முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கருவை கலைக்‍க நண்பருடன் சேர்ந்து திவ்யா முயற்சித்ததாக, ஆவடி காவல் ஆணையரகத்தில் கணவர் அரணவ் புகார் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்ட புகாருக்‍கு மறுப்பு தெரிவித்த அவர், அந்த நேரத்தில் தான் அங்கு இல்லை என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக அரணவ் தெரிவித்துள்ளார். கருவைக்‍ கலைக்‍க திவ்யா நாடகமாடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00