இந்து மதம் என்ற பெயர் ராஜராஜ சோழர் காலத்தில் கிடையாது - சரித்திரத்தை திரிக்க வேண்டாம், மொழி பிரச்சனையை கொண்டு வர வேண்டாம் என கமல்ஹாசன் வேண்டுகோள்
Oct 6 2022 3:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜராஜ சோழர் காலத்தில் இந்து மதமே கிடையாது என்று நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பேசியுள்ளார். சரித்திரத்தை திரிக்க வேண்டாம், மொழி பிரச்சனையை கொண்டு வர வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் படக்குழுவினருடன் சேர்ந்து அத்திரைப்படத்தை நடிகர் கமல்ஹாசன் கண்டுகளித்தார். அதன் பின் செய்தியாளரை சந்தித்த அவர், பொன்னியின் செல்வன் போன்ற ஒரு பிரம்மாண்ட படைப்பை உருவாக்கியதற்காக தயாரிப்பாளர் சுபாஷ்கரன், இயக்குநர் மணிரத்னம் தலைமையிலான படக்குழுவினரை தமிழ் சினிமா சார்பில் மனதாரப் பாராட்டுவதாக கூறினார்.
மேலும் இந்து மதம் என்ற பெயர் ராஜராஜ சோழர் காலத்திலேயே கிடையாது என அவர் குறிப்பிட்டார். வைணவம், சைவம், சமணம் என்று இருந்ததே தவிர இந்து என்பது வெள்ளைக்காரர்கள் நமக்கு வைத்த பெயர் என்றும் தெரிவித்தார்.
மேலும் சரித்திரத்தை புணையவும் வேண்டாம், திரிக்கவும் வேண்டாம், மொழி பிரச்சனையை கொண்டு வரவும் வேண்டாம் என கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.