MBBS, BDS உள்ளிட்ட இள நிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் : மருத்துவ கல்வி இயக்ககம் அறிவிப்பு

Oct 6 2022 12:02PM
எழுத்தின் அளவு: அ + அ -

MBBS, BDS உள்ளிட்ட இள நிலை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், 37 அரசு மருத்துவ கல்லூரிகளில் 5 ஆயிரத்து 50 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. இரண்டு அரசு பல் மருத்துவ கல்லுாரிகளில் 200 பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. இதில், 15 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள இடங்கள் மாநில அரசுக்கு இருக்‍கிறது.

அதேபோல், 20 சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் 3 ஆயிரத்து 50 எம்.பி.பி.எஸ்., இடங்களில், ஆயிரத்து 610 இடங்களும்; பல் மருத்துவ கல்லூரிகளின் ஆயிரத்து 960 பி.டி.எஸ். இடங்களில், ஆயிரத்து 254 இடங்களும் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகிறது. இதில், ஏழு புள்ளி ஐந்து சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் உள்ள, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு, நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, கடந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கியது.

அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது. இந்த 2022 - 23ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கியது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.orgஆகிய இணைய தளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதுவரை 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00