திருவாரூரில் பழுதடைந்த நிலையில் காணப்படும் உயரழுத்த மின்மாற்றி : பெரும் ஆபத்து நடப்பதற்கு முன் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Jul 6 2022 6:43PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் சேதமடைந்த நிலையில் ஆபத்தான முறையில் காணப்படும் உயரழுத்த மின்மாற்றியை விரைந்து சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், மணலி ஊராட்சிக்கு உட்பட்ட பருத்திச்சேரி என்ற பகுதியில் திருத்துறைப்பூண்டி சாலையில், உயரழுத்த மின்மாற்றி ஒன்று உள்ளது. கஜா புயலின் போது சேதமடைந்த இந்த மின்மாற்றியில் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும், இதனை விரைந்து சீரமைக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் மின்வாரியத்துக்கு பல முறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. மிகவும் பழுதடைந்த நிலையில், ஆபத்தான முறையில் காணப்படும் இந்த உயரழுத்த மின்மாற்றியால் பெரும் விபத்து ஏதும் ஏற்படுவதற்கு முன்பு, சரி செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கஜா புயலின் போது, இப்பகுதியில் உள்ள மின்மாற்றிகள், மின்கம்பிகள் கடும் சேதமடைந்தன. அப்போதையை எடப்பாடி தலைமையிலான அரசு இதனை புதுபிக்க டெண்டர் விடப்பட்டதில் தரமற்ற முறையில் பணிகள் நடைபெற்று, சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஊழல் நடந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00