ராசிபுரம் அருகே வெடித்து சிதறிய டிராஸ்பார்மரால் மக்கள் அச்சம் : வீடுகளில் விழுந்த டிராஸ்பார்மர் உதிரிபாகங்களால் பரபரப்பு

Jul 6 2022 5:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராசிபுரம் அருகே நள்ளிரவில் டிராஸ்பார்மார் வெடித்ததில், அதிலிருந்து சிதறிய உதிரி பாகங்கள் அருகே இருந்த வீடுகளில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள R.புதுப்பாளையம் தோப்புக்காடு பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த செல்வரத்தினம் என்பவர் வீட்டின் அருகே இருந்த டிராஸ்பார்மர் நேற்று நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் டிராஸ்பார்மரில் இருந்து சிதறி உதிரிபாகங்கள் அருகில் இருந்த வீடுகளில் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த விபத்தும் ஏற்படவில்லை. டிராஸ்பார்மரில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக ஏற்கனவே பல முறை மின்வாரியத்துக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு டிராஸ்பார்மரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00