தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
Jul 6 2022 1:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், கேரளா - கர்நாடகா கடலோரப் பகுதிகள், அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.