ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் தொடங்கியது 124-வது மலர் கண்காட்சி - பலவிதமான மலர்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

May 20 2022 3:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஊட்டி கோடை சீசனின் முக்கிய அம்சமாக, தாவரவியல் பூங்காவில் பிரசத்தி பெற்ற 124-வது மலர் கண்காட்சி இன்று தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். கோடை விழாவையொட்டி உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் உதகை வருவர். கோடைவிழாவின் ஒரு பகுதியாக பிரசித்தி பெற்ற மலர்க் கண்காட்சி நடைபெறும். அதன்படி, 124-வது மலர்க் கண்காட்சி, உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று தொடங்கியது. மொத்தம் 275 ரகங்களில் ஐந்தரை லட்சம் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட தமிழக வேளாண் பல்கலைக்கழக முகப்பு, 124வது கண்காட்சி என்ற வாசகம், ஊட்டி 200 மற்றும் செல்பி ஸ்பார்ட் ஆகியவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தன. இந்த மலர் கண்காட்சி இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. மலர் கண்காட்சியை முன்னிட்டு இன்று நீலகிரிக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00