நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக நில உரிமையாளர் அலுலகத்தில் நடந்த சோதனையில் முக்‍கிய ஆவணங்கள் பறிமுதல் : இன்றும் சோதனை தொடரும் என விசாரணை அதிகாரி தகவல்

May 20 2022 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருநெல்வேலி அருகே கல்குவாரியில் நிகழ்ந்த விபத்தைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி அங்குள்ள அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர். இதில் முக்‍கிய ஆவணங்கள் சிக்‍கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, கல்குவாரி நில உரிமையாளர் சேம்பர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களின் சொத்துக்‍களை பறிமுதல் செய்வது குறித்து நடவடிக்‍கை எடுக்‍கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் திரு. விஷ்ணு தெரிவித்திருந்தார். இதனிடையே சேம்பர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் தலைமறைவாகியுள்ள நிலையில், குவாரி அருகில் அவர்களுக்கு சொந்தமான அலுவலகத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதனிடையே இன்று, திசையன்விளையில் உள்ள சேம்பர் செல்வராஜ் வீடு மற்றும் அவரது மகன் குமார் வீடுகளில் நாங்குநேரி எஸ்பி ரஜத் சதுர்வேதி தலைமை சோதனை நடத்த உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00