புரட்சித்தலைவரின் மனைவியும், முன்னாள் முதலமைச்சருமான வி.என். ஜானகி அம்மையாரின் 26-ம் ஆண்டு நினைவுநாளில், அவர்தம் நினைவைப் போற்றுவோம் - அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புகழஞ்சலி

May 19 2022 7:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

புரட்சித்தலைவரின் மனைவியும், முன்னாள் முதலமைச்சருமான திருமதி. வி.என். ஜானகி அம்மையாரின் 26-ம் ஆண்டு நினைவுநாளில், அவர்தம் நினைவைப் போற்றுவோம் என, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரின் மனைவியும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான திருமதி. வி.என். ஜானகி அம்மையாரின் 26ஆம் ஆண்டு நினைவு நாளில், புரட்சித் தலைவரின் அரசியல் செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்ததையும், தனது வருமானத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் வாங்கிய வீட்டை, புரட்சித்தலைவருக்கு கொடுத்த இடத்தில்தான், நம் கட்சியின் தலைமைக் கழகம் செயல்பட்டு வருகிறது என்பதையும், நினைத்து பார்ப்பதாகக்‍ குறிப்பிட்டுள்ளார்.

புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள், புரட்சித்தலைவியின் வழிவந்த அன்புத் தொண்டர்கள் சார்பாகவும், திருமதி வி.என். ஜானகி அம்மையாரின் நினைவு நாளில் அவர்தம் நினைவைப் போற்றுவோம் என்றும் சின்னம்மா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00