சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் எரிந்து சாம்பலான கார் : நூலிழையில் உயிர்தப்பிய தம்பதி - போலீசார் விசாரணை
May 13 2022 5:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை தாம்பரத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கார் ஒன்று ஜி.எஸ்.டி. சாலையில் எரிந்து சாம்பலானது.
சென்னையை அடுத்த ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் தனது மனைவியுடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தாம்பரம் நோக்கி காரில் சென்றுள்ளனர். அப்போது, குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் காரின் முன் பகுதியில் திடீரென புகை வர தொடங்கியுள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட சங்கர், காரை சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு இருவரும் இறங்கியுள்ளனர். கார் மளமளவென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, தகவறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.